Wednesday, 27 April 2016 07:56

ஆண்கள் ஊழலில் ஈடு­ப­டு­வ­தற்­கு அவர்­களின் மனை­வி­களே கார­ணம்! இந்­தோனே­ஷிய அமைச்­ச­ர் 

Written by 
Rate this item
(0 votes)

இந்­தோ­னே­ஷி­யாவில் ஆண்கள் ஊழலில் ஈடு­ப­டு­வ­தற்கு பேராசை பிடித்த மனை­வி­களே பகு­தி­ய­ளவில் காரணம் என அமைச்சர் ஒருவர் தெரி­வித்த கருத்தால் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது.

இந்­தோ­னே­ஷி­யாவின் மத­ வி­வ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான அமைச்சர் லுக்மான் ஹக்கீம் சைபுதீன் தெரி­வித்­தி­ருந்த இந்தக் கருத்தை பெண் உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர்.

பல சந்­தர்ப்­பங்­களில், குடும்­பத்­துடன் இல்­லாது இருக்கும் சூழலில், அதற்கு பரி­கா­ர­மாக அவர்­க­ளுக்கு அன்­ப­ளிப்­புக்­களை கொடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது என்றும், அதன்கார­ண­மாக ஊழல் மூலம் அவர்கள் பணத்தை சேர்க்கும் நிலைக்கு தள்­ள­ப­டக்­கூடும் என, மாநாடு ஒன்றில் அவர் கூறி­யதே பெரும் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்­து­ள்ளது.

இப்­ பி­ரச்­சினையை சமா­ளிக்க, தமது கண­வர்­களால் வாங்கிக் கொடுக்க முடி­யாத விலை­யு­யர்ந்த பரிசுப் பொருட்­களை மனை­விமார் வற்­பு­றுத்­தாமல் இருக்க வேண்டும் எனவும் சைபுதீன் அந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

 

Read 161 times
Super User

Libero tellus sit ipsum ante eu Curabitur nibh Sed Pellentesque nisl. Nibh quis laoreet mauris mi est quis nibh porttitor.

Website: www.joomlart.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.