Thursday, 28 April 2016 09:38

சார்லி சாப்ளினுக்கு அருங்காட்சியகம்!

Written by 
Rate this item
(0 votes)

சர் சார்லஸ் சாப்ளின் என்ற சார்லி சாப்ளினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோமாளித்தனமாக நகைச்சுவை வேடத்தில் நடித்து உலகப்புகழ் பெற்ற சாப்ளின், ஊமைக் காலத்தில் தனது கற்பனை வளத்தால் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மேதை. அவர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த பின்பு, 1918-ம் ஆண்டு 2000 அமெரிக்க டாலருக்கு ´மிக்கிமவுஸ்´ போன்ற காதுகளை உடைய ´BELL and Howell 2709´ மாடல் கேமராவை வாங்கி, ஹாலிவுட்டில் சாப்ளின் ஸ்டூடியோவை நிறுவினார்.

கார்களில் எப்படி ´ரோல்ஸ் ராய்ஸ்´ பிரசித்தமோ, அப்படி கேமராக்களில் இது பிரசித்தம். இதன் மூலம் சாப்ளின் The Great Dictator, Modern Times, The Kid, The Gold Bush போன்ற படங்களை தயாரித்து பெரும் புகழும், பணமும் ஈட்டினார். இந்த கேமரா பலரின் கைமாறி, கடைசியாக அமெரிக்க கேமரா சேகரிப்பாளரிடம் வந்து சேர்ந்தது. நல்ல நிலையில் இயங்கிய இந்த கேமராவை லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனம் 1,80,000 அமெரிக்க டாலருக்கு 2011-ம் ஆண்டு விற்பனை செய்தது.

தனது அபூர்வ கேமரா மூலம், தனக்கு பிடித்தமான தலைவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் சார்லி சாப்ளின், இந்திய தலைவர்களை மிகவும் நேசித்தவர்.

74 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ மிகவும் புகழ்பெற்றது. அந்த போட்டோவில் மகாத்மா, சார்லி சாப்ளின், கவிக்குயில் சரோஜினி நாயுடு, அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் உள்ளனர். 1931-ல் லண்டன் கேனிங்டவுன் பகுதியில் உள்ள ´டாக்டர் கைட்டியால்´ என்பவர் வீட்டில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோருடன் சார்லி சாப்ளின் போட்டோ எடுத்துக்கொண்டார். அதுவும் அபூர்வ போட்டோவாகும்.-

பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் ஒன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், ஜெனிவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது.

தனது தனித்துவமான நடிப்பினால் உலகப் புகழ்பெற்ற சாப்ளின், அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி மற்றும் பிரம்புத்தடி உட்பட அவரது படைப்புகளுடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Read 184 times
Super User

Libero tellus sit ipsum ante eu Curabitur nibh Sed Pellentesque nisl. Nibh quis laoreet mauris mi est quis nibh porttitor.

Website: www.joomlart.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.