Wednesday, 27 April 2016 11:42

சம்பிக்க சந்தேக நபராகலாம்! 

Written by 
Rate this item
(0 votes)

ராஜகிரிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த சிசிடீவி காட்சிகளின் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை சந்தேகநபராக பெயரிடுவதா இல்லையா என தீர்மானிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

 

கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது

அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார். 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடீவி காட்சிகள் வெலிக்கட பொலிஸாரால் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டது. 

குறித்த காட்சிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குறித்த காட்சிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும், அந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை சந்தேகநபராக பெயரிடுவதா இல்லையா என தீர்மானிக்கப்படும் என்றும் நிதிபதி கூறினார். 

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை 05 இலட்சம் ரூபா பிணையில் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

குறித்த வழக்கு ஜூலை 15ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Read 213 times Last modified on Wednesday, 27 April 2016 11:51
Super User

Libero tellus sit ipsum ante eu Curabitur nibh Sed Pellentesque nisl. Nibh quis laoreet mauris mi est quis nibh porttitor.

Website: www.joomlart.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.