உலகம்

உலகம் (14)

மெக்ஸிகோவைத் தாக்கிய பெரும் பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடிவருகின்றனர்.அந்த நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நைஜீரியாவில் பல லட்சம் மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என ஐநா மீண்டும் எச்சரித்துள்ளது.அங்கு உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் எனவும் ஐ நா கூறுகிறது. அதில் பெரும்பாலானோர் சிறார்கள்.

இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய தீ விபத்தை இது வரையில் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.அமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.

சோமாலியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் எத்தியோப்பிய படையினர், மத்திய பிராந்தியமான ஹிரானில் உள்ள பெரிய ராணுவ தளத்திலிருந்து வெளியேறி உள்ளனர்.

காவிரிப் பிரச்சினையால் பெரும் கலவரத்தை சந்தித்த கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில்,இன்று அமைதி திரும்பியது.அதே நேரத்தில், கர்நாடகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து நாளை புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேரில் விளக்க உள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் சற்று முன்னர் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.

செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்திலுள்ள கஃபேயில், ஆயுதம் தாங்கிய ஒருவர் தனது மனைவி உள்பட 5 நபர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இஸ்தான்புல் விமான நிலையத் தாக்குதலில் 36 பேர் உயிரிழப்பு, பலர் காயம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 36 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 140 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல்லின் ஆட்டடெர்க் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலிலேயே இந்ததாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.