Thursday, 02 March 2017 05:39

தேர்தலுக்கு நாங்கள் தயார்! மஹிந்த தேசப்பிரிய

Written by 
Rate this item
(0 votes)

தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

என்னிடம் யாரேனும் மீன் கறியும், சோறும் சம்பளும் சாப்பிடுகின்றீர்களா அல்லது சோறும், மீன்கறியும். சம்பளும் சாப்பிடுகின்றீர்களா எனக் கோட்டாலும் என்னுடைய பதில் ஒன்றாகவே இருக்கும்.

எனெனில் இரண்டும் ஒன்றேயாகும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பு ஆகிய அனைத்துமே அரசாங்கத்திற்கு ஒன்றேயாகும்.

இந்த அனைத்து தேர்தல்களும் எம்மை பொருத்தவரையில் ஒன்றே அவை அனைத்துமே எமது தொழிலில் ஓர் அங்கமாகும். நாமும் தீயணைப்புப் படைவீரர்களைப் போன்றே செயற்படுகின்றோம்.

தீ ஏற்பட்ட போது அது எப்வாறு ஏற்பட்டது என்பதனை ஆராய்ந்து பார்க்காது அதனை அணைப்பது போன்றே எமது கடமையாகும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read 184 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.