Monday, 27 June 2016 16:47

ஜமெய்க்கா கெமர் பெய்லிக்கு ஸிகா தொற்றியுள்ளது?

Written by 
Rate this item
(0 votes)

பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டு விழாவில் ஆடவர் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் தங்கம் வென்ற கெமர் பெய்லி கோலுக்கு ஸிக்கா தொற்­றி­யுள்­ளது.

தனது கழுத்துப் பகு­தியில் ஏற்­பட்­டி­ருந்த வீக்கம் ஒன்றை தனது காதலி கண்­டு­பி­டித்துக் கூறி­யதை அடுத்தே தனது நிலை குறித்து உணர்ந்­த­தாக ஜமெய்க்­காவின் 24 வய­து­டைய மெய்­வல்­லுநர் தெரி­வித்தார்.

 ‘‘என்னில் தொற்று பர­வி­யி­ருந்­ததை நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. இந்தத் தொற்­றுடன் நான் மூன்று தினங்­க­ளாக பயிற்­சியில் ஈடு­பட்­டு­வந்­துள்ளேன்’’ என்றார் பெய்லி கோல்.

 பிப்பால் ஏற்­படும் குறை­க­ளுடன் கடும் தொடர்­பு­டைய ஸிகா தொற்று பரவும் அச்சம் கார­ண­மாக ரொறி மெக்­இல்ரோய் உட்­பட பல கோல்வ் விளை­யாட்டு வீரர்கள் ரியோ 2016 ஒலிம்­பிக்­கி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்­ளனர்.

 ‘‘முதுகுப் பகு­தியில் வலி­யையும் தசை­களில் விறைப்­புத்­தன்­மை­யையும் உணர்ந்தேன். ஆனால் உடற்­ப­யிற்சி கார­ண­மாக அவ்­வாறு ஏற்­பட்­டி­ருக்­கலாம் என கரு­தினேன்’’ என லண்டன் 2012 ஒலிம்­பிக்கில் 4 x 100 மீற்றர் தொடர் ஓட்­டத்தில் யூசெய்ன் போல்­டுடன் தங்கப் பதக்கம் வென்ற பெய்லி கோல் தெரி­வித்தார்.

 ‘‘இதி­லி­ருந்து குண­ம­டை­வது எளி­தல்ல. உடலில் தேமல் இருக்­கின்­றது. எனது கண்கள் வலிக்­கின்­றன. ஆனால் இப்­போது தசை­களில் வலி இல்லை. அது ஆறு­தலைத் தரு­கின்­றது’’ என்றார் அவர்.

 அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்ள ஜமெய்க்­காவின் ஒலிம்பிக் திறன்காண் போட்டியை நல்ல மன நிலையுடன் எதிர்கொள்ள தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Read 210 times
Super User

Libero tellus sit ipsum ante eu Curabitur nibh Sed Pellentesque nisl. Nibh quis laoreet mauris mi est quis nibh porttitor.

Website: www.joomlart.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.